வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

கருத்தரித்தல் மற்றும் கருத்தரித்தலில் ஏற்படும் காலதாமதம்

கால்நடை வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பால் மாடு வளர்ப்பில் கருத்தரித்தல் என்பது மிக முக்கியமான காரணியாகும். சாதாரணமாக பால் மாடு குறிப்பாக கலப்பினங்கள் வருடத்திற்கு ஒரு கன்று ஈன்றால் மட்டுமே பால்மாடு வளர்ப்பு ஒரு இலாபகரமான தொழிலாக இருக்கும். வருடம் ஒரு கன்று ஈன வேண்டும் எனில் கருத்தரிக்க வைப்பதில் அதிகக் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும் அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

சினைபருவம் என்றால் என்ன?

சாதாரணமாக கலப்பின கிடேரிக் கன்றுகள்  முதல் 18 மாதக் காலத்திற்குள் பருவம் அடைகின்றன. அவ்வாறு பருவம் அடைந்த கால்நடைகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. கன்று ஈன்ற பசுக்கள் 21 வது நாளிலும் எருமைகள் 23 வது நாளிலும் பருவ சுழற்சிக்கு வரும்.

 

பருவ சுழற்சியின் நிலைகள்

பருவ சுழற்சியை கீழ் கண்டவாறு வகைப்படுத்தலாம்
  • முன் சினை பருவம்
  • சினை பருவம்​

முன் சினை பருவம் 
இந்த நிலை சுமார் மூன்று தினங்கள் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் வெளிப்புற அறிகுறிகள் ஏதும் தெரிவதில்லை.
சினை பருவம் 
இந்த நிலை 12 மணிமுதல் 24 மணிநேரம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் வெளிப்புற அறிகுறிகள் நன்கு காணப்படும்.

  • முன் சினை பருவ காலம் 
  • மைய சினை தருணம்
  • பின் சினை தருணம்
 

முன் சினை பருவம் காலம்

சினை பருவம் ஆரம்பித்த எட்டு மணிநேரம் வரை முன் சினைபருவம் எனப்படும். இந்நிலையில் கண்ணாடி போன்ற மெல்லிய திரவம் வடியும்.

 

மைய சினை தருணம்

இந்த நிலை என்பது சினைப் பருவம் ஆரம்பித்த 8 முதல் 16 மணிவரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் தன்மீது பிறகாளைகள் மற்றும் பசுக்களை தாவ அனுமதிக்கும். இத் தருணமே சினைப்படுத்த சரியான நேரமாகும். மேலும் இந்நிலையில்  கண்ணாடி போன்ற திரவம் வடியும்.

 

பின் சினை தருணம்

3 முதல் 5 தினங்கள் வரை நீடிக்கும். பிற பசுக்களையோ, காளைகளையோ தாவ அனுமதிக்காது. 

 

சினை பருவ அறிகுறிகள்

  • பருவத்திற்கு வந்த மாடுகளில் கீழ்கண்ட அறிகுறிகள் தென்படும்
  • மாடு அமைதியின்றி பரபரப்பாக காணப்படும்
  • அருகில் உள்ள  மாடுகள் மீதுதாவும்
  • பிற மாடுகள் மற்றும் காளைகளை தாவ அனுமதிக்கும்
  • தனியாக ஒதுங்கி நிற்கும்
  • அடிக்கடி சிறு நீர் கழிக்கும்
  • கண்களில் கருவிழிப் பார்வை விரிந்திருக்கும்
  • வாலை ஒதுக்கிக் கொண்டு இருக்கும்
  • பிறப்பு உறுப்புகளின் உதடுகள் தடித்தும் சிவந்தும் காணப்படும்
  • பிறப்பு உறுப்பில் கண்ணாடி போன்றதிரவம் வடியும்.

 

 

கருவூட்டல்

கருவூட்டல் பின் வரும் இரு முறைகளை பின்பற்றி  செய்யப்படுகிறது.

  • இயற்கை முறையில் கருவூட்டல்
  • செயற்கை முறையில் கருவூட்டல்
 

இயற்கை முறையில் கருவூட்டல்

இந்த முறையில் நல்ல ஆரோக்கியமான பொலிகாளையை கொண்டு கருவூட்டல்  செய்யலாம்.

 

செயற்கை முறையில் கருவூட்டல்

தற்போது இயற்கை முறையில் கருவூட்டல் செய்வதைவிட செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது சுலபமானது மேலும் அனைத்து அரசு கால்நடை மருந்தகங்களிலும் தரமான உறை விந்துகுச்சிகள் கிடைக்கின்றன. மேலும் பயிற்சி பெற்ற நபர்கள் மூலம் நடமாடும் கருவூட்டல் செய்ய வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

 

கருவூட்டல் செய்வதற்கு தகுந்த நேரம்

காலையில் பருவத்திற்கு வந்தகால் நடைகளுக்கு மாலையிலும், மாலையில் பருவத்திற்கு வந்த கால்நடைகளுக்கு காலையிலும் கருவூட்டல் செய்வது சிறந்த பலனை அளிக்கும்.

 

கருத்தரித்தலில் ஏற்படும் காலதாமதம்

  • சத்து பற்றாக்குறை
  • கருப்பை போதிய வளர்ச்சி அடையாதது
  • கருப்பையில் புண்
  • நோய் தொற்று
  • உறை விந்து குச்சியில் ஏதேனும் தொழில் நுட்ப பிரச்சனை
  • கால தாமதமாய் கருவூட்டல் செய்தல்.
  • வயது  

ஆகிய காரணங்களால் கருத்தரித்தலில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள்  உள்ளது.

 

 

கருவூற்ற காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான அம்சங்கள்

  • கருவூற்ற காலத்தில் வளரும் கருவின் தேவை கேற்பவும் தாய் பசுவின் தேவை கேற்பவும் 
  • சத்தான உணவுகளை வழங்க வேண்டும்.
  • முதல் இரு மாதங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கக் கூடாது.
  • சினை மாடுகளை 3 முதல் 5 மணிநேரம் வரை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
  • சினை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாய் 1 முதல் 2 கிலோ வரை அடர்   தீவனமும் 10-20 கிலோ பசுந் தீவனமும் 5 கிலோ உலர் தீவனமும் கொடுக்க வேண்டும்.
  • வைட்டமின் ஏ, அயோடின், தாமிரச் சத்து, தழைச் சத்து கலந்த தாதுக்கள் கருவில் உள்ள கன்று வளர்வதற்கு ஏதுவாய் இருக்கும்.

 

 

தொகுப்புரை

கால் நடை மருத்துவரில் உதவியுடன் நல்ல தரமான உறை விந்துகுச்சிளை பயன்படுத்தி கருவூட்டல் செய்தால், ஆரோக்கியமான நல்ல கன்றுகளை நாம் பெறலாம்.