வாழ்நாள் கல்வி

பயறுவகைப் பயிர்கள் சாகுபடி தொழில நுட்பம்

பாசிப்பயறு சாகுபடி தொழில் நுட்பம்

பயறுவகைப் பயிர்கள் சாகுபடி தொழில நுட்பம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது.
இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது

 

ரகம்

கோ 4, கோ 1, கே.எம். 2

 

பட்டம்

ஆடி பட்டம்

 

விதையளவு

8 கிலோ /  ஏக்கர்

 

விதை நேர்த்தி

உயிர்உர விதை நேர்த்தியான ரைசோபியம் 200 கிராம், 
 பாஸ்போ பாக்டீரியா 200 கிராம்,  இவற்றை ஆறிய அரிசி 
   வடிகஞ்சியில்  கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் 
  உலர்த்தி விதைக்க வேண்டும்.  

 

 

நிலம் தயாரித்தல்

 4 உழவு  (புழுதிபட உழ வேண்டும்.)

 

அடியுரம்

ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரம் போட வேண்டும் இத்துடன் 30 கிலோ  டி.ஏ.பி. உழவு சால் மூலம் ஒரு ஏக்கருக்கு போட வேண்டும்.

 

உயிர் உரம்

ரைசோபியம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ,   50 கிலோ அளவுள்ள மக்கிய ஈரப்பதம் உள்ள தொழுவுரத்துடன்  நன்றாக கலந்து வயலில்  ஈரம் இருக்கும் பொழுது  தூவிவிடவேண்டும்

 

நுண்ணுரம்

பயிர்வகை நுண்ணுரம் 2 கிலோ,  மணல் 20 கிலோவடன் கலந்து ஒரு ஏக்கருக்கு  மேலாக தூவிவிட வேண்டும்.

 

 

பயிர் இடைவெளி

 30 X 10 செ.மீ. ( 33 செடிகள் / சதுர மீட்டர்)

 

நீர் நிர்வாகம்

விதை முளைக்கும் போதும்,பூ பூக்கும் பருவம் காய் வளர்ச்சி பருவம்  ஆகிய முக்கிய வளர்ச்சி பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்

 

களை நிர்வாகம்

நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும், 30ம் நாள் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். பயறு சாகுபடியில் சரியான தருணத்தில் களை  எடுக்காமலிருந்தால் பயர் வளர்ச்சி  பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.

 

அசுவினி

இளம் தளிர்கள்,  பூக்கள், மொட்டுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும். பபூக்களும் பஞ்சுகளும் உதிரும். செடிகளை சுற்றி   எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை 
அசுவிணி தாக்கப்பட்ட செடிகளை களைத்து அழிக்க வேண்டும்.  மோனோகுரோட்டோபாஸ்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில்  தெளிக்கலாம்.

 

பச்சைப்புழு

இதன்  பழுப்பு நிற தாய்ப்பூச்சி சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம்தளிர்கள், பூக்கள், காய்களில்  தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்தை மட்டும் காய்களுக்குள்  செலுத்தி வட்டவடிவ துவாரங்கள் ஏற்படுத்துகின்றன.  


கட்டுப்படுத்தும் முறை 
விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். 
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை  4 சிசி  / ஏக்கர்

 

நாவாய்ப்பூச்சி

இப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உண்டாக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் அவை வாடி உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை 
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி மாலத்தியான் தெளிக்கலாம். 

 

 

வேர்அழுகல்

செடி ஆங்காங்கே பழுத்து  மஞ்சள் நிறத்துடன் காணப்படும் 
கட்டுப்படுத்தும் முறை 
கடைசி உழவின் போது  டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ 
20 கிலோ ஆறிய தொழு உரத்துடன் கலந்து  இட வேண்டும். 

 

 

சாம்பல் நோய்

இலைகளின் இரு புறங்களிலும் சிறிய வெண்மை கலந்த  சாம்பல் நிறமான  புள்ளிகள் காணப்படும். இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை

நோய் தாக்கிய செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். கார்பன்டிசியம் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

அறுவடை தொழில் நுட்பம்

முற்றிய நெற்றுக்களை அறுவடை செய்து காய வைத்து குச்சியில் தட்டி பயிர்களை பிரித்தெடுக்க வேண்டும். 

 

 

முக்கிய குறிப்பு

இலை வழித் தாவர உணவாக ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம்    மல்டிகே கரைசலை  பயிர் பூ பூக்க தொடங்;கும் பருவத்திலும்,  பிஞ்சு பருவத்திலும் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளி விட்டு செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
அறுவடை செய்யும்பொழுது பாசிப்பயிரின் வேர்ப்பகுதியை வயலில் விட்டு அறுக்க வேண்டும்.

 

 

முடிவுரை

தமிழகத்தில்  பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தமிழரின் திருநாளான பொங்கல் தினத்தன்று சர்க்கரைப் பொங்கல் என்ற உணவுவகை அரிசி, வெல்லத்துடன் பாசிபயறும் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. பாசிபயறு பருப்பு சாம்பாரில் துவரம்.சில இடங்களில் அரிசியும், சிறுபயறும் சேர்த்து கஞ்சியாக உண்ணப்படுகிறது. 
 இவை  அதிகளவு தேவைப்படுவதர் அவற்றை குறைந்த செலவினைக் கொண்டு சாகுபடி செய்து அதிக மகசூல்  முன்வருவோம்.