வாழ்நாள் கல்வி

மலர் பயிர்கள்

செண்டுமல்லி சாகுபடி தொழில் நுட்பம்

மலர் பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

சென்டு மல்லியை மஞ்சள் தங்கம் என்று கூறுவர் இதன் தாயகம் மெக்சிக்கோ வாகும். சென்டு மல்லி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இம்மலர்த் தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சம் அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். சென்டு மல்லி எல்லா வகை மண்ணிலும்  பயிரிடலாம் 

 

 

ரகம்

இளம் மஞ்சள், சந்தன மஞ்சள்

 

பட்டம்

ஆடி பட்டம்

 

நாற்று எண்ணிக்கை

ஒரு ஏக்கருக்கு 9 ஆயிரம் நாற்றுக்கள்

 

நிலம் தயாரித்தல்

நன்கு புழுதிபட 4 ஆழமான உழவுகள் போடவேண்டும்

 

அடியுரம்

தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் போடவேண்டும்

 

நாற்றாங்கால் தயாரிப்பு

3 அடி அகலம் 10 அடி நீளம் உள்ள பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.  பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் போட்டு மண்ணுடன் கலந்து அதன் மேல் விதையை தூவ வேண்டும்.  30 - 35 நாள் வயதுடைய நாற்றை பிடுங்கி நடவு செய்யலாம். 

 

நாற்று நேர்த்தி

400 கிராம் அசோஸ்பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக்கொண்டு நாற்றை பிடுங்கி நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். 

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 2அடி

செடிக்கு செடி  1 அடி.

 

நடவு முறை

கரையின் இரு புறமும் நாற்றை நடவு செய்ய வேண்டும்.

 

களை நிர்வாகம்

களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

நீர் நிர்வாகம்

5 நாளைக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

உர நிர்வாகம்

45 ம் நாளில் மேலுரமாக ஒரு ஏக்கருக்கு டி.ஏ.பி. 50 கிலொவடன்  வேப்பம் பண்ணாக்கு 25 கிலோவை கலந்து இட வேண்டும்.

 

காஞ்சாரை நோய் தாக்குதல்

செடியின் நுனி கருகி காணப்படும். செடியில் பூக்கள் காய்ந்து சருகு போல் காணப்படும்.  செடியில் பூக்களும் அதிகம் பூக்காது.
 
கட்டுப்படுத்தும் முறை 
டைத்தேன் எம். 45 250 கிராம்  ஏக்கருக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 

 

வைரஸ் நோய் தாக்குதல்

வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் சுருங்;கி காணப்படும். பூக்கள் எடுக்காமல் இருக்கும்.
 
கட்டுப்படுத்தும் முறை
வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகள் தென்பட்டால் உடனே வயலில் இருந்து பிடுங்கி எடுத்து தூரத்தில் எரிந்து விடவேண்டும்.
 

 

 

அறுவடை தொழில் நுட்பம்

75ம் நாள் பூ  பூக்க ஆரம்பிக்கும்.  வாரத்திற்கு ஒரு முறை பூ அறுவடை செய்யலாம்.

 

முடிவுரை

சென்டு மல்லி  குறைந்த வயதுடைய பயிர் ஆகையால் இவற்றை சாகுபடி செய்து 3 மதத்திற்குள் வருமானத்தை பெருக்கமுடியும் இவற்றை பரிக்க ஆட்கள் செலவும் குறைவு என்பதாலும் இவை கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கக் கூடியதாக இருப்பதாலும்  எண்ணெய் தயாரிக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும் இவற்றின் தேவை அதிகரித்து வருவதால் இதற்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது எனவே அனைத்து விவசாயிகளும் இவற்றை சாகுபடி செயது நல்ல வருமானத்தை பெருக்க முன்வருவோம்