வாழ்நாள் கல்வி

மலர் பயிர்கள்

முல்லை பூ சாகுபடி தொழில் நுட்பம்

மலர் பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

முல்லை பூ கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. முல்லை பூ வின் தாயகம் இந்தியாவாகும். இதன் பூக்கள் நறுமணமுடையவை.பெண்கள் தலையில்  சூடிக்கொள்ளவும், நறுமணப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. தமிழகத்தில்  முல்லை செடியினை   வீடுகளிலும் தோட்டங்களிலும் பந்தலிட்டு வளர்த்து   பயன்படுத்தி வருகிறார்கள்.

 

ரகம்

செடிமுல்லை

 

பட்டம்

புரட்டாசி.

 

நாற்று எண்ணிக்கை

350 நாற்றுகள் / ஏக்கர்.

 

நிலம் தயாரித்தல்

நன்கு புழுதிபட 3  முதல் 4 உழவுகள் போடவேண்டும்

 

அடியுரம்

தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் போடவேண்டும்.  அல்லது ஆட்டு எரு ஒரு செடிக்கு 5 கிலோ அல்லது வண்டல் மண்10 கிலோ போடலாம். அல்லது மண்புழு உரம் 1.5 டன் போட வேண்டும்

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 8அடி, 
செடிக்கு செடி 8 அடி. 

 

களை நிர்வாகம்

சிறிய செடியாக இருக்கும் போது மாதத்திற்கு 3 களைகளும், பெரிய செடியாக ஆகிவிட்டால் மாதத்திற்கு 1 களையும் வெட்டி வேண்டும்.

 

நீர் நிர்வாகம்

15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை)

 

உர நிர்வாகம்

முதல் உரமாக 90 கிலோ கடலை புண்ணாக்கை செடிக்கு அரை அடி தள்ளி போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

 

மேலுரம்

ஒரு ஏக்கருக்கு 100 கிலோ  காம்ப்ளக்ஸ் கடலைப்புண்ணாக்கு 100 கிலோ செடிக்கு அரை அடி தள்ளி இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

சுருட்டை நோய் தாக்குதல்

செடியின் இலை சுருண்டு  காணப்படும் செடி வெளுத்தும் காணப்படும். 
கட்டுப்படுத்தும் முறை 
சல்பர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

வேர்அழுகல்

செடி நுனியில் இருந்து காய்ந்து வரும்.  அந்தச் செடியைப் பிடுங்கிப் பார்த்தால்  வேர்அழுகி செடி பட்டுக் காணப்படும். வேர்பட்டை கையில் பிடித்தால் உருவினால் வந்துவிடும். 
கட்டுப்படுத்தும் முறை 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி தண்ணீரில் கரைத்து வயலில் ஈரம் இருக்கும்  வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.

ஒரு செடிக்கு 250 கிராம் வேப்பம்  புண்ணாக்கு  இட்டு கட்டுப்படுத்தலாம்

 

பச்சை புழு தாக்குதல்

புழுக்கள் பூவிற்குள்ளே இருக்கும்.  பூவின் காம்பை ஓட்டை போட்டு விடுவதால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாது. 

கட்டுப்படுத்தும் முறை
 
குவினல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி   தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 

 

அறுவடை தொழில் நுட்பம்

தினமும் காலையில் நன்கு பருத்த பூக்களை பறிக்க வேண்டும்.

 

முடிவுரை

முல்லை பூ வை பெண்கள் விரும்பி தலையில் சூடிக்கொள்வதாலும் அவற்றில் மருத்துவக்குணம்  இருப்பதாலும் முல்லை பூ வின் தேவை அதிகரிப்பதால் முல்லை பூ  சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது 
எனவே மற்ற விவசாயிகளும்  முல்லை பூ சாகுபடி செய்து அதிக வருமானத்தை பெற முன்வருவோம்