வாழ்நாள் கல்வி

மலர் பயிர்கள்

வாடாமல்லி சாகுபடி தொழில் நுட்பம்

மலர் பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

வாடாமல்லி . தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது இதற்கு வாடாமல்லி என்று பெயர்வரக்காரணம்  எப்பொழுது பார்த்தாலும் அப்பொழுதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பதால்தான் இதற்கு வாடாமல்லி என்று பெயர் வந்தது. இது வறண்ட பகுதியில் கூட வளரக்கூடிய தவரமாகும். இது ஒன்று அல்லது இரண்டடி உயரம் வளரக்கூடிய செடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தையில் அன்றாட கிடைக்கக் கூடிய பூ வகைகளில் ஒன்றாகும். இதில் வயலட், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அதிகளவு காணப்படுகிறது. எனினும் வயலட் நிற மலர்கள் அதிகளவில் வணிக ரீதியாகவும் அலங்காரம் செய்யப்பயன் படுகிறது

 

ரகம்

வெள்ளை,  வாடாமல்லி.  சிவப்பு.

 

பட்டம்

ஆனி பட்டம் 

 

விதை அளவு

10 ஆயிரம் நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு நடவு   செய்ய வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

நன்கு புழுதிபட  ஆழமாக 3 முதல்  4 உழவுகள் வரை போடவேண்டும்

 

அடியுரம்

தொழுஉரம் 1 ஏக்கருக்கு 5 டன் போடவேண்டும்

 

விதை நேர்த்தி

நாற்றை பிடுங்கி 500 கிராம் அசோஸ்;பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து நாற்றை நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். 

 

நாற்றாங்கால் தயாரிப்பு

3 அடிக்கு 10 அடி நீளம் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.  பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் போட்டு, அதன் மேல் விதையை தூவ வேண்டும்.  30- 35 நாள் வயதுடைய நாற்றை பிடுங்கி நடலாம்.

 

பயிர் இடைவெளி

2 அடிக்கு 1 அடி என்ற விகிதத்தில் இடைவெளி இருக்க வேண்டும். நாற்றை இரண்டுபுறமும் நடவு செய்ய வேண்டும்.

 

களை நிர்வாகம்

களையை ஆட்கள் மூலம்  வெட்டி கட்டுப்படுத்தலாம் வயலில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 

நீர் நிர்வாகம்

5 நாளைக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

உர நிர்வாகம்

50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 25 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து வைத்து மண் அணைக்க வேண்டும். 

 

காஞ்சாரை நோய் தாக்குதல்

செடியின் நுனி கருகி காணப்படும். பூ கருகி காய்ந்து விடும் 
கட்டுப்படுத்தும் முறை 
டைத்தேன் எம். 45. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.½ கிராம் என்ற விகிதத்தில்  கலந்து பயிருக்கு தெளிக்கலாம்

 

 

நூற்புழு தாக்குதல்

செடி மேலிருந்து கீழாக பட்டுக்கொண்டே வரும். 
கட்டுப்படுத்தும் முறை 
இதனை கட்டுப்படுத்த நடவு நட்ட 40ம் நாள் அல்லது முதல் களையின் போது போரெட் அல்லது பியூரடான் குருணை மருந்துடன் டி.ஏ.பி. அல்லது வேப்பம் புண்ணாக்கை சேர்த்து வயலில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த இயற்கை மருந்தாக பெசிலியோ மைசிஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து நுற்புழுவை கட்டுப்படுத்தலாம். 

 

அறுவடை தொழில் நுட்பம்

வாரம் ஒரு முறை மாலை வேளையில் அறுவடை செய்து காலையில் முதல் வண்டிக்கே 5 மணியளவில கொண்டு சென்றால் சந்தையில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது  

 

முடிவுரை

வாடாமல்லி  பூ அதிகளவில் ஏற்மதிக்கு உகந்த மலராக இருப்பதால் இவற்றிவல் மருத்துவக்குணங்களும் அதிகளவு இருப்பதாலும்  இதன் தேவை அதிகம் உள்ளதாலும் விவசாயிகள் இவற்றை சாகுபடிசெய்து லாபம் பெற முன்வருவோம்