வாழ்நாள் கல்வி

மலர்கள் சாகுபடி

காக்கரட்டான் சாகுபடி தொழில் நுட்பம்

மலர்கள் சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

மணக்கும் மல்லிகை விலையில் உச்ச கட்ட உயரத்திற்கு எகிறி விடும் நிலையில்  அதை 
எட்டிப்பிடிப்பது  என்பது குதிரை கொம்பு என்றாகிவிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மல்லிகைக்கு  மாற்றாக பயன்படுத்தப்படும் பூ காக்கரட்டான் இதற்கு மெட்ராஸ் மல்லி என்றும் ஒரு பெயர் உண்டு இது  கர்நாடாகாவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. வடிவத்திலும் நிறத்திலும் மல்லிகை பூபோன்று இருக்கும். இந்த பூக்கள் மல்லிகைக்கு இனையாக அழகுக்காகவும், மாலைகட்டவும்  பூஜைகக்கும்  பெரிதும் பயன்  படுத்த படுகிறது
இதற்கு வசந்த முல்லை என்று மற்றொறு பெயரும் உண்டு இவற்றை விவசாயிகள்  அதிகளவு தென்மேற்கு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர் 

 

 

ரகம்

நாட்டு ரகம்.

 

பட்டம்

புரட்டாசி, ஆடி.

 

நாற்று எண்ணிக்கை

600 நாற்றுக்கள் / ஏக்கர்.

 

நிலம் தயாரித்தல்

நன்கு புழுதிபட 3 முதல் 4 உழவுகள் வரை போடவேண்டும்.

 

அடியுரம்

தொழுஉரமாக 5 டன் போடவேண்டும்.

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 5 அடி
செடிக்கு செடி 5 அடி. 

 

 

களை நிர்வாகம்

சிறிய செடியாக இருக்கும்போது மாதத்திற்கு 2 களைகளும், பெரிய செடியாக ஆகிவிட்டால் மாதத்திற்கு 1 களைகளும் வெட்ட வேண்டும்.
 

 

 

நீர் நிர்வாகம்

10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை)

 

உர நிர்வாகம்

முதல் உரமாக பதியன் நட்ட 80ம் நாள் கடலை புண்ணாக்கு ஒரு செடிக்கு 100 கிராம் என்ற அளவில் வைக்க வேண்டும்.

 

மேலுரம்

ஒரு செடிக்கு 2 மாதத்திற்ஒரு செடிக்கு 2 மாதத்திற்ஒரு செடிக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை 200 கிராம் கடலைப்புண்ணாக்கு, 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு செடியைச்சுற்றி போட்டு மண்ணால் மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும். 

 

செவ்வட்டை நோய் தாக்குதல்

செடியின் இலை பகுதியில் இருந்து செவ்வட்டை நிறமாக மாறி காய்ந்து விடும். 
 
கட்டுப்படுத்தும் முறை 
டைத்தேன் எம். 45,ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

வேர்அழுகல்

செடியின் வேர்பாகம் படந்து ஓடாமல் ஆங்காங்கே இத்துவிடும் பிறகு செடி வாடி காய்ந்து விடும்

கட்டுப்படுத்தும் முறை

ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோவை  50 கிலோ தொழுவுரத்தில் கலந்து செடி நடவு செய்த ஆரம்ப காலத்திலே   வயலில் ஈரம் இருக்கும்பொழுது போடனும் பிறகு 3 மாதத்திற்கு ஒருமுறை இதேபோல போட்டுவந்தால் வேர்அழுகல் வராது 

 

பச்சை புழு தாக்குதல்

புழு மழை, பனி காலத்தில் பூச் செடியைத் தாக்கும்.  சிறிய புழுக்கள் பூவிற்குள்ளே சென்று   இதழையும், பூக்காம்பையும் சாப்பிடும்.
 
கட்டுப்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு பிவேரியா பேசியானா என்ற பூஞ்சாண கொல்லி 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது தண்ணீரில் கலந்து செடியைச் சுற்றி ஊற்றிவிடலாம்.

குவினல்பாஸ் ஒரு  லிட்டர் தண்ணீருக்கு  4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்

 

 

கற்றாழைப்பூச்சி தாக்குதல்

செடியின் மேல் இலை மற்றும் தண்டு பாகத்தை  தொட்டால் பஞ்சு போன்று இருக்கும். 
 
கட்டுப்படுத்தும் முறை
 
மீன் எண்ணை 5 மில்லி  / அசிபேட்  ஒரு  லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.  

 

 

அறுவடை தொழில் நுட்பம்

ஒரு வருடத்திற்கு பிறகு பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.  தினமும் காலை 9 மணிக்குள்  பூக்களை பறிக்க வேண்டும்.

 

 

முடிவுரை

காக்கரட்டான் பூ விற்கு வசந்த முல்லை என்ற  மற்றொரு பெயரும் உண்டு . இவை  பெயருக்கு ஏற்றார் போல வடாமலும் வதங்காமலும் இரண்டு மூன்று நாட்களுக்கு தாக்குபிடித்து இருப்பதால் இவற்றை விவசாயிகள் விரும்பி  சாகுபடி செய்து  வருகிறார்கள். இவற்றை சாகுபடி செய்து அதிகளவு மகசூல் எடுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறார் இவற்றை பயிர்செய்வதால் மொத்தமாகவும் தினசரியும் வருமானம் எடுப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பதால் விரும்பி இந்த வசந்த முல்லையை சாகுபடி செய்கின்றனர்.இவற்றை மற்ற விவசாயிகளும் சாகுப செய்து வாழ்வில் உயர வேண்டு கிறோம்