வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

கொம்புச்சாண உரம் தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

கொம்புச் சாண உரம் என்பது மாட்டினுடைய கொம்புகளில் சாணத்தை தினித்து அவற்றை தண்ணீர் விட்டு மதிப்புக்கூட்டி மக்கவைத்து பயன்படுத்துவது கொம்புச்சாண உரமாகும். இவற்றை தெளித்தால் எல்லாவகையான  பயிர்கள் நன்கு செழித்து வளர்வது மட்டுமல்லாது நுண்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. அவற்றை தயாரிக்க செலவும் குறையும் நஞ்சில்லா காய்கறியும் நமக்கு கிடைக்கும். சுற்று சூழலும் பாதுகாக்க பயன்படுகிறது அனைத்து விவசாயிகளும் இவற்றை தயாரித்து பயன்படுத்த முன்வருவோம்.

 

 

கொம்புச்சாண உரம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

தேவையான அளவு  - பசுமாட்டு கொம்புகள் 50
தேவையான அளவு  - பசுமாட்டு சாணம்
தேவையான அளவு  - தண்ணீர்

 

 

தயாரிக்கும் முறை

முதல் படி 

முதலில் சாணத்தில் சிறிதளவு தண்ணீர்  தெளித்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும் 

இரண்டாம்படி 

பிசைந்து வைத்துள்ள சாணத்தை பசுமாட்டு கொம்பில் ஒரு குச்சியை வைத்து இடம் அனைத்து நிறம்பி இருக்குமாறு சாணத்தை திணிக்க வேண்டும்.; இவ்வாறு திணித்து வைத்துள்ள கொம்புகளை சேர்த்து ஒரு கிடங்கு 4 அடி நீளம், 4 அடி அகலம்  4 அடி உயரம் உள்ள குழியில்  கொம்பில் கூர்மையான நுனி மேலே இருக்குமாறு கிடங்கில் பதித்து வைக்க வேண்டும் 

மூன்றாம்படி

கிடங்கில் பதிவைத்துள்ள கொம்புகளை  மண்ணை கொண்டு மூடி தண்ணீர் விடவேண்டும.;  மூன்று மாதங்களுக்கு அந்த இடத்தில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.  பிறகு அவற்றை எடுத்து கொம்பினுள் இருக்கும் சாணி கொட்டினால் அவை   கருப்பு நிறத்தில் காப்பித்தூள் வடிவில் இருக்கும் அவற்றை நாம் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

 

பயன்படுத்தும் பயிர்கள்

அனைத்துவகை பயிர்களுக்கும் தெளிக்கலாம்

 

பயன்படுத்தும் முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் கொம்பு சாண உரத்தை போட்டு நன்றாக சூழலும் வகையில் ஒரு குச்சிவைத்து இரண்டு பக்கமும்  சுற்றுவேண்டும் வேப்பிலை கொண்டு காலை அல்லது மாலை நேரத்தில் பயிர்களுக்கு தெளிக்கலாம். 

 

கொம்புச்சாண உரத்தின் பயன்கள்

இவை வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது
பயிர்கள் நன்றாக செழித்து வளர்கின்றது
பூ,பிஞ்சு கொட்டாது
சுற்றுபுற சூழல் பாதிப்பு அடைவதில்லை
செலவு குறைவு
மகசூல் 30 சதம் அதிகரிக்கும்
தரமான காய்கறிகள் கிடைக்கும்

 

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை (RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி அஞ்சல், கன்னிவாடி வழி,
திண்டுக்கல் மாவட்டம் - 624 705.
போன் நம்பர் - 8870392422
மின்னஞ்சல் rsgaseed @gmail.com 
வலைதளம்; -WWW. rsga.co.in
முகநூல்  Facebook /rsgaseedkannivadi
Youtube    - rsgaseed

 

 

முடிவுரை

கொம்புச் சாண உரம் தயாரித்து பயன்படுத்தி வருவதால் மகசூல் கூடுவதுடன் சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது செலவும் குறையும் நம்மிடம் உள்ள பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்  இயற்கை விவசாயம் செய்து கொம்புச் சாண உரம் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.