பயறுவகை பயிர்கள்
முன்னுரை
துவரையின் தாயகம் இந்தியா ஆகும். இப்பயிரானது இந்தியாவில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்டது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் முக்கிய பயறு வகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிமு 2000 ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் முறையாக பயிர்செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு பரவியது. தற்போது உலகெங்கும் துவரையானது பரவலாகப் பயிரிடப்படுகிறது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் பயிராகும் முக்கியமான பயிராகும். இது வறட்சியையும், கடுமையான காலநிலையையும் தாங்கி வளரும் தாவரம் ஆகும். துவரையானது வேகமாகவும் அதே நேரத்தில் குறைந்த சத்துள்ள மண்ணிலும் செழித்து வளரும் தன்மையுடையது. பயிர்களில் ஊடு பயிராக சால் விட்டுப் பயிரிடுவார்கள் இதன் கிளைகள் அதிகமாக வரும்.பூ மஞ்சள் நிறத்தில் மற்றும் ஊதா, சிவப்பு இதழ்கள் இருக்கும். காய்கள் கொத்தாக விடும்.
ரகம்
எஸ். ஏ 1, கோ 1, கோ 2.
பட்டம்
ஆடி
விதையளவு
3 கிலோ / ஏக்கர்
விதைநேர்த்தி
ரைசோபியம் 200கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், இவற்றை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நன்கு புழுதிபட 3 முதல் 4 உழவுகள் போட வேண்டும்
அடியுரம்
ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரம் போட வேண்டும் இத்துடன் 30 கிலோ டி.ஏ.பி. உழவு சால் மூலம் ஒரு ஏக்கருக்கு போட வேண்டும்.
உயிர் உரம்
ரைசோபியம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ இந்த உரத்தினை 50 கிலோ அளவுள்ள மக்கிய ஈரப்பதம் உள்ள தொழுவுரத்துடன் நன்றாக கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவிவிட வேண்டும்
நுண்ணுரம்
பயறுவகை நுண்ணூட்டம் 2 கிலோ / ஏக்கர் 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவிவட வேண்டும்.
விதைப்பு முறை
உழவு சாலில் வரிசையாக விதைக்க வேண்டும்
பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 7அடி, செடிக்கு செடி 1 அடி
நீர் நிர்வாகம்
விதை முளைக்கும் போதும,பூ பூக்கும் பருவம் காய் வளர்ச்சி பருவம் ஆகிய முக்கிய வளர்ச்சி பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்
களை நிர்வாகம்
நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும், 30ம் நாள் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். பயறு சாகுபடியில் சரியான தருணத்தில் களை எடுக்காமலிருந்தால் பயர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.
வளர்ச்சி ஊக்கி
40 முதல் 50 ம் நாளில் பூ பூக்கும் சமயத்தில் ஒர லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம். மல்டிகே மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இவற்றை பூக்கும் பருவத்திலும் பிஞ்சு பிடிக்கும் பருவத்திலும் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்
அசுவுனி
இளம் தளிர்கள், பூக்கள், மொட்டுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறதில் காணப்படும். பூக்களும் பிஞ்சுகளும் உதிரும். செடிகளை சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
அசுவிணி தாக்கப்பட்ட செடிகளை களைத்து அழிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதம் தெளித்தால் பூக்களில் உள்ள பாதிப்பை குறைக்கலாம். மோனோகுரோட்டோபாஸ் 300 மில்லி / / ஏக்கர் தெளிக்கலாம்.
பச்சைக் காய்ப்புழு
தாய்ப்பூச்சி சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம்தளிர்கள், பூக்கள், காய்களில் தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்தை மட்டும் காய்களுக்குள் செலுத்தி வட்டவடிவ துவாரங்கள் ஏற்படுத்துகின்றன.
கட்டுப்படுத்தும் முறை
விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம்.
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை 4 சிசி / ஏக்கர்
இனக்கவர்ச்சிப்பொறி ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் வைத்து தாய்அந்துப் பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3மில்லி, அசிப்பேட் 2 கிராம், நிம்பசிடின் 3 மில்லி மூன்றையும் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
நாவாய்ப்பூச்சி
இப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உண்டாக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் அவை வாடி உதிர்ந்து விடும்.விதை வைக்காது
கட்டுப்படுத்தும் முறை
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி மாலத்தியான் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்
மஞ்சள் தேமல் நோய்
இலைகளில் தேமல் போன்று மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும். தீவிரமாக தாக்கப்பட்ட செடிகளில் இலைகள் சிறுத்து பூமற்றும் காய்கள் பிடிக்காமல் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
நோய் தாக்கிய செடிகளை பிடிங்கி அழிக்கவும். நோய் எதிர்ப்பு ரகங்களை பயிரிடவும். 3 நாள் புளித்த தயிர் 100 மில்லி ஃ 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும் பூக்கள் அதிகம் பிடிக்கும் பிடித்த பூக்கள் அனைத்தும் காயாகும்
வைரஸ்நோய்
துவரைச்செடியில் பூ, பிஞ்சு, காய் இருக்காது செடியில் வளர்ச்சி குன்றி, இலைகள் சிறுத்துக் காணப்படும்.
கட்டுப்படுத்தும்முறை
இச்செடியை முற்றிலும் அகற்றி விட வேண்டும்.
அறுவடைத் தொழில் நுட்பம்
செடியை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து தட்டி பயறுகளை பிரித்து எடுக்க வேண்டும்
சேமித்து வைத்தல்
விதைகளை செம்மண் கலந்து காற்று புகாத பையில் சேமித்து வைக்க வேண்டும்
முக்கிய குறிப்புகள்
இலைவழித் தாவர உணவாக மல்டிகே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து பயிர் பூ பூக்க தொடங்கும் பருவத்திலும், பூப் பருவத்திலும் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளி விட்டு செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்
முடிவுரை
நாம் அன்றாட உணவில் துவரை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது மேலும் அவற்றில் புரதச்சத்தும் உள்ளது. நீண்ட நாட்கள் களஞ்சியப்படுத்தும் (சேமித்து வைக்கும்) பண்பினையும் கொண்டுள்ளது. எனவே இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சத்துமிகுந்த முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. துவரையின் தேவை அதிகரிப்பதால் மானாவாரி பயிராக. இறவையில் சாகுபடி செய்ய முன்வருவோம்.