வாழ்நாள் கல்வி

கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்

கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்

கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

கனகாம்பரம் குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இம்மலர்த் தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சம் அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும், பூக்கும் தாவரமாகும். இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள்.. ஆகவே விவசாயிகள் அனைவரும் கனகாம்பரம் விவசாயம் செய்து அதிக லாபம் பெறலாம். 

 

ரகம்

தலை அலங்காரக் கனகாம்பரம்

 

பட்டம்

ஆண்டுமுழுவதும் பயிரிடலாம்.( ஜீலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடுவது சிறந்தது .

 

நிலம் தயாரித்தல்

நன்கு புழுதிபட 3 முதல் 4 உழவுகள் போடவேண்டும்.

 

அடியுரம்

அடி உரமாக தொழுஉரம் 5 டன் அல்லது மண்புழு உரம் 5 டன் கடைசி உழவில் போடவேண்டும்.  பிறகு ஆட்டுக்கிடை நிறுத்தலாம்;.  செடிகள் நட்ட 30 நாட்கள் கழித்து எக்ருக்கு வேப்பம் புண்ணாக்கு 100 கிலோஇ தழைச்சத்து 20 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். பிறகு 90 நாட்கள் கழித்து 20:10:10 கிலோ என்ற விகிதத்தில் தழைஇ மணிஇ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய  இராசயன உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும். இவ்வாறு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும்.

 

நாற்றாங்கால் தயாரிப்பு

தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அமைத்து அவ்றறில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்துஇ பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்சவேண்டும். விதைகள் விதைத்த 60ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும். 60 நாட்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி நடவு  செய்யவேண்டும். 

 

 

நாற்று எண்ணிக்கை

ஒரு  ஏக்கருக்கு 20 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டும்

 

நாற்று நேர்த்தி

நடும் முன் நாற்றுக்களை  ஒரு லிட்டர் தண்ணீருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் சூடோமோனஸ் 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து  கரைசலில் நனைத்து  நடவேண்டும். 

அல்லது இரசாயன முறையில்
 எமிசான் (1 கிராம் / லிட்டர் ) என்ற விகிதத்தில் கலந்து  கரைசலில் நாற்றுக்களை நனைத்து நடவேண்டும். 

 

 

பயிர் இடைவெளி

பாருக்கு பார் 2 அடி ,செடிக்கு செடி 1 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

 

 

களை நிர்வாகம்

சிறிய செடியில் மாதத்திற்கு 2 களையும்  (அதிகமாக களை  இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.) பெரிய செடியாக வளர்ந்த பின் மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். 

 

நீர் நிர்வாகம்

வாரம் ஒருதண்ணீர் விட்டால் போதும்.(சூழ்நிலைக்கேற்ப) 

 

உர நிர்வாகம்

மாதத்திற்கு ஒரு முறை 50 கிலோ காம்ப்ளக்ஸ்,50 கிலோ ஆமணக்கு  புண்ணாக்கு செடிக்கு அருகில் மண் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

 

செல் தாக்குதல்

சிவப்பு செல் இலையில் அடியில் இருக்கும்.  செடி இளம்மஞ்சள் நிறத்தில் வெளுத்து காணப்படும்.
 
கட்டுப்படுத்தும் முறை 
மெட்டாஸ்டாக்ஸ் 4 மில்லி / ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 

 

 

பச்சைப்புழு

பூவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். பூவின் மொக்கு பாகத்தை ஓட்டை போட்டுக்கொண்டு இருக்கும்.
 
கட்டுப்படுத்தும் முறை
 
குவினால்பாஸ் 4 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 

 

 

வாடல் நோய்

இந்நோய் பயிரின் அனைத்து பருவத்திலும் தாக்கும். தண்ணீர் தேங்கியிருக்கும் வயலில்லும் காணப்படும்.  தாக்குதல் செடி முழுவதும் அல்லது பக்கக் கிளைகளில்  காணலாம். இளம் மற்றும் நன்கு வளர்ந்த செடிகளும் தண்ணீர் இன்றி வாடுவதைப் போன்று காணப்படும்.  வாடிய செடிகள் முதலில் வயலில் பரவலாகக் காணப்படும்.  மழைக்குப் பின்னர் இதன் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.  வாடிய செடியினை பிடுங்கிப் பார்த்தால் தண்டின் அடிப்பகுதி மற்றும் ஆணி வேரில் கருமை நிற புள்ளிகளை காணலாம்.  சில சமயங்களில் வேர் அழுகல் அறிகுறிகளைக் காணலாம்.  ஆனால் அழுகிய பகுதியில் ஈரப்பதம் இருக்காது.  இந்த அறிகுறிகளைக் கண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 கனகாம்பரத்தில் வாடல் நோயினை கட்டுப்படுத்தும் முறை
 
தானியப் பயிரைக் கொண்டு பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.  தொடர்ந்து அதே வயலில் கனகாம்பரம் நடுவதைத் தவிர்க்க வேண்டும்.  மேலும் சோளப் பயிரினை வரப்புகளில் இடைப் பயிராக நட்டு தாக்குதலின் சேதத்தை குறைக்கலாம். 
 
கோடை உழவு செய்ய வேண்டும்.  அறுவடை செய்த பின்னர் நிலத்தில் உள்ள செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு  வேப்பம் புண்ணாக்கு 25 கிலோ கடலைப்புண்ணாக்கு 75 கிலோ இட்டு நடவு செய்யவேண்டும்.
 
உயிரியல் முறையில் டிரைகோடெர்மா விரிடி என்ற உயிரியல் பூசணக்கொல்லியினை நாற்று நேர்த்தி செய்யலாம்  நேரடியாக தொழுஉரத்துடன் கலந்து மண்ணில் இட்டு இதன் தாக்குதலைக் குறைக்கலாம்.
.  

 

வேர்அழுகல்

வேரழுகல் தாக்குதலின் அறிகுறி 

செடியை பிடுங்கி வேர் பகுதியை இழுத்துப் பார்த்தால் பட்டையுடன் கலண்டு வரும். 
இவை வேரழுகல் தாக்குதலால் ஏற்படுகிறது அவை தண்ணீர் அதிகமாக பாய்ச்சினாலும் அல்லது சரளை மண்பகுதியை உடைய மண்கண்டமாக இருந்தாலும் வேரழுகல் தாக்குதல் ஏற்படும்.
 
இவற்றை கட்டுப்படுத்த நன்றாக மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 100கிலோவில் பெசிலியோமைசிஸ் 3 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 3 கிலோ அரை கிலோ நாட்டுச்சர்கரையுடன் தண்ணீர் தெளித்து புட்டு பதத்தில் நன்றாக கலந்து  வைத்திருந்து 2 நாட்கள் கழித்து எடுத்துப்போடலாம்.

பெசிலியோமைசிஸ்,  டிரைக்கோடெர்மா விரிடி  ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒவ்வொன்றும் 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வயலில் செடிக்கு அருகில் அல்லது வேர்பகுதியிலும் ஊற்றிவிடலாம்.
 
வேரழுகலை ஏற்படுத்தக்கூடி பூஞ்சாணங்களை வளர விடாமல் தடுக்கும் வேரழுகல் தாக்கிய செடியை புடுங்கி அப்புறப்படுத்தி விடவும் மற்ற செடிகளுக்கு பரவாமல் பாதுகாக்கலாம்.

 

நூற்புழு

செடியின் வேர்ப்பகுதி பாதிக்கப்படும்.  தாக்கப்பட்ட செடியின் இலைகள் ஊதா நிறத்தில் மாறி காய்ந்து விடும். 
கட்டுப்படுத்தும் முறை 
இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது நல்லது.  150 கிலோ வேப்பங்;கொட்டை தூள் கடைசி உழவில் போட்டு உழ வேண்டும். 
இரசாயண முறையில்  கட்டுப்படுத்தும் முறை
ஒரு ஏக்கருக்கு 10 கிலோ பியூரடான் அல்லது 10 கிலோ போரேட் இட்டு உழவு செய்ய வேண்டும். 

 

அறுவடைத்தொழில் நுட்பம்

ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூக்களை அறுவடை செய்ய வேண்டும். 
கனகாம்பரம் நட்ட 2-3 மாதங்களுக்குள் பூக்க ஆரம்பிக்கும். பூ முழுவதுமாக பூப்பதற்கு 2 நாட்கள் ஆகும். ஆகவே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது மிகவும் அவசியம்   

 

 

முக்கிய குறிப்புகள்

பூகதிர்களைச் செடி நட்ட இரண்டு மாதங்கள் வரை கிள்ளி எறிய வேண்டும் இது செடிகள் நன்றாக  வளரவும் மற்றும் அதிக பூக்கள்  பின் வரும் காலங்களில் கிடைக்கவும் வழி செய்கிறது.