வாழ்நாள் கல்வி

அரளி சாகுபடி தொழில் நுட்பங்கள்

அரளி சாகுபடி தொழில் நுட்பங்கள்

அரளி சாகுபடி தொழில் நுட்பங்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

அரளியில் ஏறாளமான வகைகள்  பூவின் நிறத்திற்கு ஏற்ப உள்ளன. தனி இளம்சிவப்பு, தனி வெள்ளை, தனிசிவப்பு, மஞ்;;சள், அடுக்கு ரகங்;கள் ஆகியவகைகள் உள்ளன. இவற்றில் இளஞ்சிவப்பு நிறங்களை உடைய பூக்களிலிருந்து வாசனைத்திரவிங்;கள் தயார்செய்யப்படுகின்றன. அரளி மலர்கள் இறைவழிபாட்டிற்காக ஆலயங்;களில் வளர்க்கப்படுகிறது.  நமது நாட்டில் எல்லா மாநிலங்களிலும் இதன் இலை, காய் பட்டை மற்றும் வேர்கள் நச்சுத்தன்மை உடையது. இவற்றில் நீரியோடோரின் மற்றும் கராபின் போன்ற மருந்து பொருட்கள் உள்ளன. இந்த மருந்துப் பொருட்கள் கடுமையான நச்சுத்தன்மை உடையது. இதயத்தின் இயக்கத்தை பாதித்து செயலிலக்கச் செய்யும் தன்மை உடையது. சுவாசக் குழலின் இயக்கத்தையும் உடனே செயலிலக்கச் செய்கின்றது. இந்த மருந்துப்பொருட்களை மிகமிக குறைவான அளவுகளில் பயன்படுத்தி பலவகையான நோய்களை குணப்படுத்துகின்றன, உடலின் பாகங்;களில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் மற்றும் பால்வினை நோய்களையும் குணப்படுத்துவதற்காக பயன்படுகிறது

 

ரகம்

செவ்வரளி, வெள்ளை அரளி.

 

பட்டம்

புரட்டாசி  -   செப்டம்பர் அக்டோபர்  மாதங்களில் செடிகளை நடவு செய்யலாம்

 

மண் வகை

செம்மண், கரிசல்மண், மற்றும் வண்டல் மண் போன்ற மண்வகைகளில் நன்றாக வளரும்.

 

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழவு செய்து  மண்ணைப் பன்படுத்த வேண்டும். 3 மீட்டர் இடைவெளியில்  ஆழம் அகலம் மற்றும் நீளமுள்ள குழிகளைத் தோண்டி ஒவ்வொரு குழிக்கும் 10 கிலோ மக்கியத் தொழுஉரம் இட்டு செம்மண் மற்றும் மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிறப்ப வேண்டும்.

 

அடியுரம்

3 டன்கள் தொழு உரம் / ஏக்கர்.

 

நாற்றின் எண்ணிக்கை

ஒரு ஏக்கருக்கு 500 குச்சிகள் தேவைப்படும்.

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்கு செடி 2 அடி.

 

நடவு முறை

ஒரு வரிசையில் குச்சிகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி இரண்டு நுனி பாகங்களை மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும்.

 

களை நிர்வாகம்

15-வது நாளில் முதல் களையும் பிறகு 20 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

 

நீர் நிர்வாகம்

20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை. நீர் பாசனம்   நடவு செய்த  முதல் மூன்று மாதங்களுக்கு வாரம் ஒரு முறையும் அதற்கு பிறகு மழை இல்லாத காலங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப் பாசனம் அளிக்க வேண்டும்.

 

உர நிர்வாகம்

 

உரமிடுதல்    அரளிச் செடிகளுக்கு இரசாயன உரங்கள் இட தேவையில்லை. ஆண்டுக்கு இரண்டுமுறை அதாவது ஜனவரியிலும் ஆகஸ்;ட் மாதத்திலும் ஒவ்வொரு செடிகளுக்கு 10 கிலோ தொழு உரம் இடுவது நல்லது.

உரநிர்வாகம் 

50 கிலோ காம்ப்ளக்ஸ், வேப்பபுண்ணாக்கு 50 கிலோ, 50 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு ஒரு ஏக்கர், செடிக்கு அருகில் சிறிய குழிவெட்டி மண் இட்டு மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

பயிர்ப் பெருக்கம்

குச்சிகளை வேர்ப் பிடிக்கச்  செய்து நட வேண்டும். குச்சிகளின் தோல் ஓரளவு பச்சை நிறம் அல்லது கரும்பச்சை நிறமுள்ளதாக இருக்க வேண்டும். 30-45 செ.மீ நீளமுள்ள குச்சித்தண்டுகளை  பணிமூட்ட அறையில் மணலில் பதித்து வேர்ப் பிடிக்கச் செய்திடலாம். குச்சிகள் 60 நாட்களில் வேர்கள் பிடிக்கத் தொடங்;கும். மூன்று மாங்;களில் நன்றாக வேர்ப் பிடித்து குச்சிகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.

 

செல்தாக்குதல்

செல் விழுந்தவுடன் செடி வெண்மையாகிவிடும். செடியைத் தட்டினால் செல் பறக்கும். பிறகு தழை அனைத்தும் கொட்டிவிடும். இதனை கட்டுப்படுத்த அசிபேட் ஓரு லிட்டர்  தண்ணீருக்கு 2 கிராம் இமிடாகுளோர் 3 மில்லி  என்ற விகிதத்தில் கலந்து அடிக்க வேண்டும்.

 

 

பச்சைப்புழு

இப்புழுக்கள் மழை மற்றும் பனி காலத்தில் பூச்செடியை தாக்கும். பூவிற்குள் சிறிய புழுவாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த குளோரிபைரிப்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி மருந்து கலந்து தெளிக்க வேண்டும். அரளிச் செடிகளை  அதிகளவு பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை.

 

அறுவடைத் தொழில் நுட்பம்

செடிகள் நடவு செய்த  4 - 6 மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். ஆண்டு முழுவதும் பூக்கள் கிடைக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்;ட் வரை அதிகளவு பூக்கள் கிடைக்கும்.
மகசூல் ஒரு ஏக்கருக்கு சுமார் 40 கிலோ பூக்கள் தினமும் கிடைக்கும். ஆண்டொன்றுக்கு சராசரியாக 10000 கிலோ பூக்கள் கிடைக்கும்.
தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை பூ எடுக்கலாம். பூ பறித்து 30 நிமிடம் நீரில் வைக்க வேண்டும். அதில் உள்ள பால் வெளியேறிய பின் 'பேக்கிங்' செய்தால் ஒரு வாரம் வரை மொட்டுகளாக இருக்கும். மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று பேக்கிங் திறந்தால் அரைமணி நேரத்தில் மலர்ந்து விடும்.

 

 

பயன்கள்

அரளியை உதிரி மலர்களாகவும், மலர்களை சரங்களாகவும் கட்டி பயன்படுத்தலாம்.குட்டை வகை அரளி செடியை தொட்டியில் வளர்த்து அலங்கார செடியாகவும் வளர்க்கலாம். அரளி செடியின் பால் விஷம் உடையது எனவே பூக்களை கவனமாக கையாள வேண்டும். இளஞ்சிவப்பு நிறங்களை உடைய பூக்களிலிருந்து வாசனைத்திரவியங்;கள் தயார் செய்யப்   படுகின்றன.

 
இரசாயன உரங்கள் தேவையில்லை. புதிதாக வளரும் தளிர்களில் மட்டுமே பூக்கும். எனவே கவாத்து செய்தால் பூ ஐந்து மடங்கு உற்பத்தி அதிகரிக்கும். காய்ந்த குச்சி மற்றும் நோய் தாக்கிய பகுதிகளை நீக்க வேண்டும்.


கதம்பம் கட்டுவதற்கும், பூஜைக்கும் பயன்படுத்தப்படும் அரளிப்பூ... திண்டுக்கல், மதுரை மாவட்டத்திலிருந்துதான் பெருமளவுக்கு உற்பத்தியாகி தமிழகம் முழுவதும் பயணிக்கிறது. 'அரளி, வி10ஷத்தன்மையுடையது' என்றொரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது வேறு வகை அரளி. அது காட்டுப்பகுதிகளில் இயற்கையாக விளைந்து கிடக்கும். மலர்த்தேவைக்காக பயிரிடப்படும் அரளிக்கும் காட்டு அரளிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

 

 

முக்கிய குறிப்புகள்

அரளி மலரை சாகுபடி செய்வதற்கு அதிகளவு தண்ணீர் செலவாகாது.; 25ஆண்டுகள் வரை செழிப்பாக வளரக்கூடிய பயிராக விளங்குகிறது.


எந்த விஷேசமாக இருந்தாலும் மலர்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக விற்பனை வாய்ப்பு உள்ள பயிர்களில், மலர்களும் முக்கிய இடத்திலிருக்கின்றன. இதனால், மலர் விவசாயிகளுக்கும் குறிப்பிடத் தக்க வருமானம் கிடைத்து வருவதால், சமீப காலமாக மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது. 

 

 

முடிவுரை

பொதுவாக, மலர் சாகுபடிக்கு நல்ல தண்ணீர் வளம் இருக்க வேண்டும். என்றாலும், குறைவான தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கும் ஏற்ற மலர்கள் உள்ளன. அவற்றில், முதலிடத்தில் இருப்பது, அரளி. தண்ணீர், பராமரிப்பு... என அனைத்துமே அதிகளவில் தேவையில்லாததால், பலரும் அரளியை விரும்பி சாகுபடி செய்கிறார்கள்.