உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

கனகாம்பரம் சாகுபடி செய்துள்ள விவசாய பெண்ணின் அனுபவம்.

Aug 5, 2020


கனகாம்பரம் சாகுபடி செய்துள்ள விவசாய பெண்ணின் அனுபவம்

என்னுடைய பெயர் முருகேஸ்வரி நான் தொடர்ந்து கனகாம்பரம் சாகுபடி செய்துவருகிறேன் கனகாம்பரம் எப்படி சாகுபடி செய்வது  என்றால்  பட்டம்- ஆண்டுமுழுவதும் பயிரிடலாம்
அடி உரமாக தொழுவுரம் 5 டன் அல்லது மண்புழு உரம் 2 டன் கடைசி உழவில் போடவேண்டும். அல்லது ஆட்டுக்கிடை நிறுத்தலாம்;1 ஏக்கருக்கு 20 ஆயிரம் நாற்றுக்கள் தேவைப்படும்  பாருக்கு பார் 2 அடி செடிக்கு செடி 1 அடி இடைவெளி விட்டு நாற்றுக்களை நடவு செய்யலாம்.

மேலுரமாக ஆமணக்கு புண்ணாக்கு ஒரு செடிக்கு 10 கிராம் அளவில் வைத்து மண் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அல்லது உயிர் உரங்கள் கலந்து போடவேண்டும்

சிவப்பு செல் இலையில் அடியில் இருக்கும். செடி இளம் மஞ்சள் நிறத்தில் வெளுத்து காணப்படும்.மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்

நூற்புழுவை கட்டுப்படுத்த 150 கிலோ வேப்பங்கொட்டை தூள் அல்லது வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவில் போட்டு உழ வேண்டும். அல்லது

வேம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ, 100 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து போடலாம்

வாடல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விரிடி, 2 கிலோ சூடோமோனாஸ் 100 தொழுவுரத்தில் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது தூவ வேண்டும்

அல்லது 1 லிட்டர் தண்ணீருக்கு 10கிராம் சூடோமோனாஸ், 10கிராம் விரிடி இரண்டையும் கரைத்து வேர்ப்பாகம் நனையும்படி கரைசலை ஊற்றி கட்டுப்படுத்தலாம்.

அறுவடைத்தொழில் நுட்பம் 
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூக்களை அறுவடை செய்ய வேண்டும்
.
மகசூல் கனகாம்பரம் நடவு செய்த 2-3 மாதங்களுக்குள் பூக்க ஆரம்பிக்கும். பூவை 2 நாட்கள் ஒரு முறை பரிக்கலாம்.

பூத்து முடிந்த பின் காய்ந்த பூ கிளைகளைக் கிள்ளி எறிய வேண்டும். மண் அணைத்தல் செடிகள் நன்றாக செழிப்பாக வளர வழிவகுக்கும்.

ஒரு கிலோ எடையில் 15,000 பூக்கள் இருக்கும். சராசரி ஒரு கிலோ பூ சுமார் 80-100 வரை விற்கும். சராசரியாக விழாக்காலங்;கள் மற்றும் திருமணநாட்களில் 1 கிலோ சுமார் 300 - 1000 வரை விற்பதுண்டு.