உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

வெண்டை சாகுபடி செய்துள்ள விவசாய பெண்ணின் அனுபவம்

Aug 4, 2020


வெண்டை சாகுபடி செய்துள்ள விவசாய பெண்ணின் அனுபவம்.

என்னுடைய பெயர் கலாராணி. ரொம்ப நாளா தரிசாக இருந்த நிலத்தை ஒரு குழி( 60 சென்ட் விவசாய நிலம் குத்தகைக்கு எடுத்து அவற்றில் ஒரு மாதம் களைக்கொல்லி அடித்து அப்படியெ விட்டு விட்டேன் பிறகு 4 உழவுகள் போட்டு பார்கட்டி ஜனவரி 15 தேதிக்குள் வெண்டை
நடவு செய்துள்ளேன்.

அடியுரமாக களை எடுத்து இரசாயன உரம் யூரியா பேக்டம்பாஸ் கலந்து தூருக்கு அருகில் ஒரு செடிக்கு 10 கிராம் அளவு வைத்து மூடி மண்அணைத்து தண்ணீர் விட்டேன். இரண்டாவது மேலுரமாக பேக்டம்பாஸ் பொட்டா ஷ்; கலந்து போட்டேன்.

சாறுஉறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருந்தது அவற்றிற்கு மஞ்சள் அட்டை 60 சென்டுக்கு 10 இடங்களில் வைத்தேன் பூச்சிகள் நிறைய ஒட்டியுள்ளது. அவற்றை தொடர்ந்து பிவேரியா ஒரு டேங்க் 100 மில்லி கலந்து அடித்தேள் இதுவரை புழுவின் தாக்குதல் இல்லை.
45 நாளிலிருந்து காய் வர ஆரம்பித்தது

ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெண்டைக்காய் பரித்து வருகிறேன் ஒரு பரிப்புக்கு 300 கிலோ முதல் 350 கிலோ வரை காய் வந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் விலை ரூ 15 முதல் ரூ 20 க்கு விற்பனை செய்து வருகிறேன்.

தற்பொழுது தண்ணீர் இல்லாமல் இருப்பதால் வெண்டைச் செடி வாட ஆரம்பிக்கிறது. அருகில் உள்ள விவசாய அலுவலகம் (RSGA வில்) வறட்சியை தாங்கி வளரக் கூடிய மெத்தலோ பாக்டீரியா என்னும் வறட்சி டானிக்கை உள்ளது.

அவற்றை வாங்கி ஒரு முறை அடித்து பார்க்கச் சொன்னார்கள.; நான் அவை ஒரு லிட்டர் ரூ 350 க்கு வாங்கி ஒரு டேங்க் 100 மில்லி வீதம் பத்து டேங்க் அடித்து வந்தேன். பயிரில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பூ எடுத்து காய் வருகிறது. அதன்பிறகு திரும்பவும் இரண்டாவது முறையாகவும் 10 டேங் டித்துள்ளேன். காய் 200 கிலோவிற்கு குறைவில்லாமல் வருகிறது தற்பொழுது ஒரு கிலோ ரூ 30க்கு விற்கிறது. வெண்டை சாகுபடியில் எனக்கு நல்ல லாபம் தான் என்கிறார்.

மேலும் தொடர்புக்கு 
9952305745