உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

முருங்கையில் ஊடுபயிர் சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

Feb 26, 2020


திரு இஞ்ஞாசி என்ற விவசாயி குரும்பபட்டி கிராமத்தில் ஒரு குழி ( 60 சென்ட் ) நிலம் வைத்துள்ளேன் அதில் கத்தரி நடவு செய்து வாய்க்கால் பகுதியில் முருங்கை நடவு செய்துள்ளேன்.


முருங்கை நடவு செய்தேன.; ஓரே வருடத்தில் முருங்கையும் காய்க்கு வந்து விட்டது. முருங்கை காய் 3 மாதம் அறுவடை செய்துவிட்டு காய்க்காமல் ஓயும் சமையத்தில் முருங்கை நடவு செய்த வாய்க்காலில் உழவு கூட போடாமல் அப்படியே அவரை விதையை நடவு செய்தேன்.


அவரை விதை நடவு செய்த 60 நாட்களில் முருங்கை மரத்தில் கொடிகள் ஓட ஆரம்பிக்கும். கொடி முருங்கை மரத்தின்; நுனிவரை ஓடியிருந்தால் முருங்கை மரத்தை 4 அடி உயரம் வரை விட்டுவிட்டு மரத்தை மடக்கி. வெட்டி விட வேண்டும்.


அவரைக் கொடிகள் அனைத்து முருங்கை மரத்தை சுற்றி பந்தலில் படர்வது போல படர்ந்துவிடும். நாம காய் எடுக்கவும் எளிமையாக இருக்கும். பந்தல் போடும் செலவும் நமக்கு மிச்சம். இவ்வாறு மூன்று நான்கு மாதங்கள் காய்கள் தொடர்ந்து எடுத்த பிறகு கொடியை அறுத்து மாடுகளுக்கு போட்டு விட்டு திரும்பவும் நாம முருங்கை மரத்தில் வரும் சிம்புகளை அப்படியே விடலாம். முருங்கை மரமும் நமக்கு நடவு செய்யாமலேயே காய் வர ஆரம்பிக்கும். 


அவரைக்கு உயிர் உரங்களை மண்புழு உரத்துடன் கலந்து வைத்தேன் பூ நிறைய எடுத்துள்ளது மேலும் அவரை இலைகள் மஞ்சள் நிறத்துடன் இருக்கிறது இதற்கு ஒரு ஏக்கருக்கு பயிர்வகை நுண்ணூட்டம் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாய்ச்சிவிட்டு வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவி விட்டேன்.


சாறுறிஞ்சும் பூச்சியின் தாக்குதலுக்கு மஞ்சள் நிறப்பொறி வயலில் பரவலாக கட்டிவிட வேண்டும். அசுவினி தாக்குதல் இருந்தது அவற்றிற்கு சூலை சாம்பல் 10 கிலோவை அதிகாலை நேரத்தில் தூவி விட்டேன் மறைந்துள்ளது. போதிய மழை இல்லாததால் பயிர்களும் செழிப்பில்லாமல் காணப்படுகின்றன.


ஒரு சில இடங்களில் இலைகளில்; வெளிர் பச்சை நிறம் தெரிகிறது இவை போக போக மாறிவிடும் போதிய மழை இல்லாததால் மற்ற விவசாயினுடைய தோட்டத்திலும் இலை வெளிர் பச்சை நிறத்தில் இருக்கிறது. 


முருங்கைக்கு நல்ல விலை கிடைத்தது தற்பொழுது அவரைக்கும் நல்ல விலை கிடைக்கும் ஒரு கிலோ விலை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.


பரவலாக காய்வந்து கொண்டுள்ளது. அப்படியே திரும்ப முருங்கையையும் விட போகிறேன் இவை செலவில்லமல் வருகிறது என்கிறார்.