உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

முருங்கை சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

Aug 17, 2020


தங்கராஜ்
என்னுடைய வயலில் 150 மர முருங்கை வரப்பு பயிராகவும் நடவு செய்துள்ளார் மரம் நடவு செய்த ஒரு வருடத்தில் காய் காய்க்க ஆரம்பிக்கும் காய் காய்ப்பது வருடத்திற்கு இரண்டுமுறை காய் பரிக்கலாம் நல்ல விலை இருந்தால் காயாக அறுவடைசெய்து விற்பனை செய்யலாம் விலை இல்லாத சமையத்தில் விதைக்கு விட்டு விதை எடுத்து வைத்தால் வயலிலேயே வந்து வாங்கிச் செல்கிறார்கள்

பொதுவாக எந்த ஒரு காயாக இருந்தாலும் விதைக்கு விட்டால் திரும்பவும் காய்காய்க்காது என்று சொல்வார்கள் நான் கண்கூடாக பார்த்துவிட்டேன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நான்றாக காய் தொடர்ந்து காய்த்து வருகிறது 50000 ஆயிரம் ரூபாய்க்கு காய்களை விற்பனை செய்தேன் நல்ல விலை கிடைத்தது


ஒவ்வொரு வாரமும் நான் விலை கேட்டபிறகுதான் காயை அறுவடை செய்வேன் காயின் விலை ஒரு கிலோ 2 ரூபாய்க்கு விற்றது. அதனால் காய்களை அறுவடை செய்யாமல் ஒரு எடுப்புக்கு 150 கிலோ காய் வரும். அவற்றை அப்படியே விதைக்கு விற்றுக் கொள்ளலாம் என்று விதைக்கு விட்டேன்

முதலில் 80 கிலோ காய் அறுவடை செய்தேன் 3 கிலோ விதை வந்தது குறைந்தது ஒரு கிலோ விதை ரூபாய் 500 க்கு கமிஷன் இல்லாமல் வண்டி வாடகை இல்லாமல் என்னுடைய வயலிலேயே வந்து விதையை வாங்கி போகிறார்கள். விதையாக விற்றால் நல்ல லாபம் தான் தொடர்ந்து காய்களை விதையாகவே எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்
மேலும் தொடர்பு கொள்ள 
9787787432