உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

வெங்காயத்தில் சாதனை படைத்த விவசாயின் அனுபவம்

Aug 13, 2020


வெங்காயத்தில் சாதனை படைத்த விவசாயின் அனுபவம்

என்னுடைய பெயர் ஆர். பி. கிருஷ;ணன் போலியம்மனூர் நான் ஒரு ஏக்கரில் வெங்காயம் 
நடவு செய்தேன்.
வெங்காயம் நடவு செய்வதற்கு முன்பு 
 பலதானியப் பயிர்கள் விதைத்து மடக்கி உழுவு செய்தேன்.
1.தவசம் (தானியம்) வகையில் ஏதாவதுநான்கு
எ.கா.
சோளம் - 1 கிலோ
கம்பு - ½ கிலோ 
தினை - ¼ கிலோ 
சாமை - ¼ கிலோ
பயறுகள் (பருப்புகள்) வகையில் ஏதாவது நான்கு 
உளுந்து - 1 கிலோ 
பாசிப்பயறு - 1 கிலோ 
தட்டைப்பயறு - 1 கிலோ
சுண்டல் 1 கிலோ - 1 கிலோ
3. எண்ணெய்வித்துகள் வகையில் ஏதாவது நான்கு 
எள் - ½ கிலோ
நிலக்கடலை - 2 கிலோ 
Nரியகாந்தி - 2 கிலோ
ஆமணக்கு - 2 கிலோ
4. பசுந்தாள் பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு
தக்கைப் பூண்டு - 2 கிலோ
சணப்பு - 2 கிலோ
நரிப்பயறு - ½ கிலோ 
கொள்ளு - 1 கிலோ
5. மணப்பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு
கடுகு - ½ கிலோ 
வெந்தயம் - ¼ கிலோ 
சீரகம் - ¼ கிலோ 
கொத்தமல்லி - 1 கிலோ
மேலே கூறிய ஐந்து பயிர்களையும் வளர்த்து 60 ஆம் நாளில் மடக்கி உழுதால் அதில் கிடைக்கும் ஊட்டங்கள் சமச் சீரானதாகவும் நுண்ணூட்டக் குறைபாடு இல்லாதவாறும் இருக்கும்.
உழவு 
நான்கு உழவுகள் போட்டேன்
அடியுரமாக
புங்கம் புண்ணாக்கு 5 கிலோ 
கடலை புண்ணாக்கு 100 கிலோ
எள்ளு புண்ணாக்கு 25 கிலோ 
வேப்பம் புண்ணாக்கு 20 கிலோ 
ஆமணக்கு புண்ணாக்கு 15 கிலோ
அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து வயலில் தூவிட்டு பார் கட்டினேன்.
பாருக்கு பார் இடைவெளி முக்கால் அடி செடிக்கு செடி இடைவெளி 4 (விரக்கடை) இஞ்ச் இடைவெளிவிட்டு வெங்காயத்தை நடவு செய்து உயிர் தண்ணீர் பாய்ச்சினேன்.
வெங்காயம் சிறிய பயிராக இருக்கும் பொழுதே இஞ்சி ஒரு கிலோ, பூண்டு ஒரு கிலோ ,பச்சை மிளகாய் ஒரு கிலோ இவற்றை சமமாக எடுத்து நன்கு அரைத்து தண்ணீர் விட்டு வடிகட்டி 15 டேங் அளவிற்கு ஒரு முறை பயிர்மீது தெளித்து விட்டேன்.
ஒரு ஏக்கருக்கு வளர்ச்சி ஊக்கியாக 2 லிட்டர் கியூமிக்காஸ் தெளித்தேன்
22 வது நாள் ஒரு களையும், 40 வது நாள் ஒரு களையும் இரண்டுமுறை களைவெட்டினேன்.
வெங்காயம் நடவு செய்த பிறகு மூன்று முறை தொடர்ந்து மழை இருந்ததால் நுனிக்கருகல் விழுந்து பழுக்க ஆரம்பித்தது
இதற்கு இரசாயன மருந்து சாப் பவுடர் 350 கிராம் மார்செல் ஒரு டேங் 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தேன்.
அதன்பிறகு ஏ1 டானிக் 200 மில்லி ஒரு முறை அடித்தேன்
இரண்டுமுறை சூடோமோனஸ்50 மில்லி, பேசிலஸ் சப்டிலஸ் 50 மில்லி ஒரு டேங்க் என்ற அளவில் தெளித்தேன்.
50 வது நாளில் சூடோமோனஸ்50 கிராம், பேசிலஸ் சப்டிலஸ் 50 கிராம் ஒரு டேங்க் என்ற அளவில் தெளித்தேன் .
 எனக்கு 8 டன் மகசூல் கிடைத்தது; காயின் தரம் நன்றாக உள்ளது
சைசும் பெரியதாக இருந்தது. ஒரு கிலோ 30 ரூபாய் என்று விற்றால் கூட நல்ல லாபம்தான்.
மேலும் தொடர்புக்கு
ஆர். பி. கிருஷ்ணன்- 9944019661