உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

அவரை சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

Aug 10, 2020


என்னுடைய பெயர் சேசுராஜ் நான் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் அமலி நகரில் வசித்து வருகிறேன்.எனக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால் எந்த விவசாயமும் செய்யவில்லை தரிசாகவே இருந்தது.எங்கள் பகுதியில் மழை பரவலாக இருந்து வருவதால் விவசாயம் செய்யலாம் என்று நினைத்து அவரை சாகுபடி செய்துள்ளேன்.அவரை சாகுபடி தொடர்ந்து செய்து வருவதாலோ என்னவோ அவரை நன்றாக காய்ப்புக்கு வரும்பொழுது செடி பட்டு விடுகிறது.இருந்தாலும் நான்; 60 சென்டில் அவரை சாகுபடி செய்துள்ளேன்.மற்ற பயிர்கள் சாகுபடி செய்தால் சரியாக வராது அதனால் அவரையே எல்லா விவசாயிம் நடவு செய்துள்ளனர்.


நான் அவரைக்கு வேரழுகள் வராமல் தடுத்து நன்றாக காய்ப்புக்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று நோக்கத்துடன் 60 சென்ட் சாகுபடி செய்திருக்கிறேன்.அவற்றில் ஆங்காங்கே செடியில் இலைகள் வாட ஆரம்பித்து உள்ளது.இவற்றிற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டுப்பார்த்தேன் ஒருவரும் சரியாக எதுவும் சொல்லவில்லை.

. அதன்பிறகு மார்க்கெட்டுக்கு காய் கொண்டு போகும் போது எனக்கு கன்னிவாடி பகுதி அருகில் ஒரு விவசாயி பழக்கம்அவர் பெயர் வேளாங்கண்ணி அவரிடம் அவரை செடி ஆங்காங்கே வாட்டத்துடன் உள்ளது என்ன செய்ய என்று கேட்டபொழுது அவர் ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர் சங்கத்தில் ஆலோசனைகள் கிடைக்கும் அங்கு சென்று கேட்டுபார் என்றார்கள்.அதன் பேரில் கன்னிவாடிக்கும் பக்கத்தில் உள்ள கிட்டம்பட்டி விவசாய அலுவலகம் சென்று அவரை செடி படுகிறது அதற்கு என்ன மருந்து உள்ளது என்று கேட்டேன்.


அவர்கள் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பெசிலியோ மைசிஸ் மூன்றிலும் ஒவ்வொரு கிலோ வீதம் மூன்று கிலோ கொடுத்து இவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து குழியைச் சுற்றி நன்றாக ஊற்றிவிட வேண்டும் என்று சொன்னார்கள்.


நான் அவற்றை வாங்கி வந்து அவர்கள் சொன்னது போல மூன்றையும் ஒரு கேனில் கொட்டி கொஞ்சம் 5 லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துவிட்டு பிறகு 200 லிட்டருக்கு அளவாக தண்ணீர் கலந்து வாடிய செடியில் ஊற்றினேன்.
பிறகு ஒரு வாரம் கழித்து வேர்பாகத்துக்கு அருகில் தோண்டி பார்த்தேன்.
தோண்டி பார்த்ததில் வேர்பகுதியை பார்த்தால் காய்ந்த வேருக்கு பக்கத்தில் திரும்ப வேர்விட்டு தழைய ஆரம்பித்துள்ளது.


செடி எதுவும் காயவில்லை மற்ற விவசாயிகளுக்கும் சொன்னேன்.
அவர்களும் இதேபோல வாங்கி வந்து ஊற்றி வருகிறார்கள். நாங்கள் எங்கள் பகுதியில் 20 விவசாயிகள் ஒன்று சேர்ந்து டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பெசிலியோ மைசிஸ் மூன்றிலும் ஒவ்வொரு கிலோ வீதம் மூன்று கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து குழியைச் சுற்றி ஊற்றி வருகிறோம்.செடி படவில்லை நன்றாக இருக்கிறது.

கிட்டம்பட்டி விவசாய அலுவலகத்திலிருந்து நேரில் வந்து பார்வையிட்டார்கள்.
தொடர்ந்து வந்து பார்க்க வருகிறோம் என்றார்கள்.எப்படியும் அவரையில் பூச்சி , நோயை தடுக்க இயற்கை முறையை பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து காட்டுவோம் என்றனர்.


மேலும் தொடர்புக்கு
8925458230