உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

Aug 8, 2020


பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்த  விவசாயின் அனுபவம் 

என்னுடைய பெயர் நடராஜ் நான் தொடர்ந்து 40 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது  விவசாயம் செய்வதற்கு முன்பு வருச வருசம் பசுந்தாள் உரப்பயிர்களை விதைத்து மடக்கி உழவு செய்து அதன் பிறகுதான் பார்க்கட்டி விவசாயம் செய்வதை வழக்கமாக்கி கொண்டேன்.  

தொடர்ந்து வெங்காயம், சாகுபடி செய்து வருவேன். வெங்காயம் அறுவடை முடிந்து அவற்றில் மிளகாய் மற்றும் வாழை சாகுபடி செய்வேன். பலதானியப்பயிர்கள் விதைத்து மடக்கி உழவு செய்வதால் வெங்காயம் நல்ல திரட்சியாகவும் பார்ப்பதற்கு நல்ல  நிறத்துடனும் இருக்கும். 

நான் அவற்றை பற்றரை  போட்டு விற்பனை செய்யும் பொழுது அதிக நாட்கள் கெடாமல் வைத்திருக்க முடிந்தது.; ஒரு கிலோ 50 ரூபாய்க்கு உடனடியாக அறுவடை செய்து போட்டுள்ளேன். இதற்கெல்லாம் காரணம் கொள் விதைத்து மடக்கி உழவு செய்து சாகுபடி செய்வதால்தான் என்று நம்பிகை பிறந்தது 
 
தற்சமையம் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் நான் பருத்தி,  மக்காச்சோளம் மற்றும் பயறுவகை பயிர்களாகி தட்டப்பயறு, உளுந்து, மொச்சை போன்ற பயிர்களை சாகுபடி செய்கிறேன் மற்ற விவசாயிகளுக் கெல்லாம் பருத்தி, மகக்காச்சோளம் தண்ணீர் இல்லாமல் மகசூல் சரியாக கிடைக்கவில்லை. எனக்கு பயிர் நன்கு வறட்சியையும் தாங்கி வந்தது ஓரளவுக்கு நல்ல மகசூலும் கிடைத்தது எனது பருத்திக்கு விற்பனை செய்யும் விலையை விட ஒரு கிலோவிற்கு கூடுதலாக 5ரூபாய் சேர்த்து கிடைத்தது. மற்ற பருத்தி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு எடுத்தால் என்னுடைய பருத்தி ஒரு கிலோ 55 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்வேன் 

நான் விவசாயம் செய்து அறுவடை முடிந்தவுடன்  கொள்ளை மட்டும் கூட விதைத்தி அப்படியே வயலில் மாட்டை கட்டி மேய விட்டு விடுவேன்.மாடும் பால் கூடுதலாக கறந்தது. 

அதன் பிறகு நான் தொடர்ந்து என்னுடைய வயலை  உழவுசெய்து இரண்டாவது உழவில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ கொள்ளு விதைத்தேன் விதைத்த 50 வது நாளில் பூக்கும் பருவத்தில் அவற்றை ரொட்டா வேட்டர் விட்டு வெட்டி மடக்கி உழவு செய்தேன். இதன் மூலம் எனது நிலம் பொதுபொதுப்பாக உள்ளது. தழைச்சத்து உரத்தை 30 சதவீதம் குறைக்கலாம். வயல் ஈரத் தன்மையுடன் காணப்படும். களையை  20 சதவீதம் குறைக்கலாம்.மகசூல் 30 சதவீம் கூடும் 

இதேபோல ஒவ்வொரு பயிர் அறுவடை முடிந்ததும் பசுந்தாள் உரப்பயிரான கொள்ளை விதைத்து விட்டுத்தான் அடுத்த பயிர் சாகுபடி செய்வேன். இதனால் மண்ணின் களர் உவர் தன்மை மாறுபடும். அனைத்து விவசாயிகளும் பயிர் அறுவடை முடிந்தது வயல் சும்மா இருக்கும் பொழுது சணப்பு, தக்கபூண்டு, கொழுஞ்சி, தட்டப்பயறு , கொள்ளு விதைத்து பூக்கும் சமையத்தில்  மடக்கி உழவு செய்யலாம்.